நம் நினைவிற்கு சில பாதுகாப்புக் குறிப்புகள்
நம் நினைவிற்கு சில பாதுகாப்புக் குறிப்புகள்
- நமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரை, தீ நமது நண்பன்.கட்டுப்படாதபோது தீ நம்மை அழிக்கும் பகைவன்.
- தீ விபத்திற்கு முக்கியமான காரணம் நமது கவனக்குறைவே
- தீயைப்பற்றிய நமது கவனம், நம் உயிரையும் மற்றும் உடமையையும் காக்கும் வல்லமை பெற்றது.
- உடலில் தீ பிடித்துக்கொண்டால், ஓடாமல், கீழே படுத்து உருளுவது தீயை அணைக்க தேவையான நடவடிக்கையாகும்.
- புகைபிடிப்பது தவிர்க்கப்படும்போது நமது உடல்நலம்பாதுகாக்கப்படுவதுடன், தீ விபத்து ஏற்படுவதும் குறைகிறது
- தீயணைப்பான்களைப்பற்றிய பொதுஅறிவு தக்க சமயத்தில் பேருதவி தரவல்லது.
- மின்வகைத் தீயை அணைக்க நீரைப்பயன்படுத்தக்கூடாது.
- மின்கசிவைத் தடுப்பது- மின்விபத்துக்களை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
- கேஸ் சிலிண்டர்களையும் அடுப்பையும் எப்படி கையாழ்வது என்பதைப் பற்றிய அறிவை எல்லோரும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
- வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் கொசுக்களின் மூலம் பரவும் வியாதிகளை தடுக்கலாம்.
No comments:
Post a Comment