*சமூக - புலன் விசாரணை -*🅘🅡🅐✍🏼 _அநீதிக்கு எதிரான குரல்✒_ ━━ *பதிவு நாள் : 19/02/2019* ━━ ❇ *_சட்டம் அறிந்துகொள்வோம்!_* 🔘 *விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?* ▪ *ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை நாம் எடுத்துக்கொள்ளலாமா?* எடுத்துக்கொள்ளலாம். நமது பகுதியில் உள்ள ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய தேவைகளுக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். யாரிடம் முன் அனுமதி பெறவேண்டும்? மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது இதற்காக அவரால் நியமிக்கப்பட்ட அலுவலரிடமோ முன் அனுமதி பெறவேண்டும். விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டும் தான் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள முடியுமா? இல்லை. பொதுமக்களும் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம் ஒருவர் தனது வீட்டுப் பயன்பாட்டிற்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ எவ்வளவு மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அளவீடு ஏதும் உள்ளதா? உள்ளது. 30 கன மீட்டர் (தோராயமாக 10 யூனிட் லோடு) அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம் இந்த அளவிற்கு வண்டல் மண்ணை எடுக்க அரசுக்கோ அல்லது வேறு எவருக்கோ கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா? இல்லை. எவ்வித கட்டணமும் யாருக்கும் செலுத்த தேவையில்லை. ஆனால் , மேற்குறிப்பிட்ட அளவிற்கு மேல் மண் எடுக்க வேண்டுமெனில் மாவட்ட நிர்வாகம் கூறும் தொகையினை செலுத்த வேண்டும். எந்தெந்த ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம்? பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகிய இவ்விரண்டு அரசுத் துறைகளின் பொறுப்பில் இருக்கும் ஏரி குளங்களில் நாம் வண்டல் மண் எடுக்கலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகள் இத்துறைகளின் பொறுப்பில் வரும். எனவே நமது பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான ஏரி மற்றும் குளங்களில் நாம் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். இதற்கென உள்ள அரசாணை எண் என்ன? அரசாணை நிலை எண் 233, தொழில்துறை (எம்.எம்.சி.2) நாள்: 23.09.2015 அரசாணையை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tnmine.tn.nic.in/GO/G.O.MS.NO.233.pdf
Ayyampettai - Chakkarapalli
Monday, February 18, 2019
அ பதிவேட்டை
அ பதிவேட்டை புரிந்து கொள்வது அவசியம்...
அசையா சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பாக பட்டா சிட்டா அடங்கல் அ பதிவேடு என வருவாய்துறை பல்வேறு ஆவணங்களை பராமரித்து வருகிறது...
#பட்டா
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை காட்டும் ஆவணம் ஆகும்.மேலும் ஊர் மாவட்டத்தின் எல்லைபகுதி உரிமையாளரின் பெயர் நன்செய் புன்செய் நிலம் பரப்பு மற்றும் தீர்வை விவரங்களும் தெளிவாக இருக்கும்...
#சிட்டா
சிட்டா என்பது ஒரு தனிநபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று அரசாங்கம் வைத்து இருக்கும் பதிவேடு ஆகும்..பட்டாவில் உள்ள அனைத்து விவரங்களும் சிட்டாவில் இருக்கும்..
#அடங்கல்
அடங்கல் என்பது ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு ஆகும்.
குறிப்பிட்ட சர்வே எண்ணுகுரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது என்கிற விவரங்கள் இருக்கும்..
அ பதிவேடு என்பது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஆவணங்களின் ஒட்டு மொத்த விவரங்களும் அடங்கியுள்ள ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்..
ஒரு சொத்து எப்போது யாரிடம் இருந்து யார் பெயருக்கு மாறினாலும் அது குறித்து இந்த ஆவணங்களி்ல் உரிய திருத்தம் செய்யபடும்.
முழுமையாக முத்திரைதீர்வை செலுத்தி பத்திபதிவு செய்தாலும் பட்டா சிட்டா அடங்கள் ஆவணங்களில் உள்ள பெயர் மட்டுமே உரிமையாளரை அடையாளம் காட்டும். வி.எ.ஓ என்னும் கிராம நிர்வாக அலுவலர் பயன்பாட்டில் இருந்தாலும் வட்டாச்சியர் ஒப்புதல் இன்றி யாரும் எந்த மாற்றத்தையூம் செய்து விட முடியாது..
சொத்து பரிமாற்றத்தில் முக்கிய ஆவணமாகும். பட்டா சிட்டா நிலத்தின் சர்வே எண் அளவு உரிமையாளர் பெயர் பயன்பாடு வரி ஆகிய விவரங்கள் அ பதிவேட்டிலும் இருக்கிறதா என்று பார்த்து சொத்து வாங்குவது சிறந்தது..
பா.வெ.
Wednesday, February 7, 2018
Natural Farms visit
Dear friends , Farm is not for visiting .Kindly avoid visiting nd coming directly without intimation.
If u want to visit , we will arrange visiting monthly twice in the future to know about
1) Simple investment to start farm.
2) some breeds like GRAMAPRIYA , KAIRALI , GIRIRAJA , VANARAJA & it's profit if u grow.
3) Feed Calculation for chicks & grower.
4) Vaccinations schedule on summer & winter season
5) Supplementry & Antibiotic for specific disease
6) Original Breeds like Aseel & Aseel fighters
7) Promotional activities for ur farm without spending money
8) Way to know your customers
9) Chicks , specific breeds & Eggs low cost sellers contacts
10) Some successful Farms Direct Visiting to learn (Naatukozhi small scale Egg producing farms & Meat producing farms Visit ).
10) Practical demo to make simple & low cost Incubators.
We plan to arrange the above mentioned categories for new comers.
Date will be announced later.
Contact :
Sri Brahma Natural Farms
Namakkal District
7200521526
Wednesday, November 5, 2014
திருமணத்தை பதிவு செய்ய தேவையான முறைகள்..!
சரி, கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்தே ஆகனும். அனைத்து மதத்தவர்களும் கண்டிப்பாக பதிவு செய்யனும்.
உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். நமக்கு காட்டுமன்னார் கோவில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனும்.
கணவருக்கும், மனைவிக்கும் தனித்தனியாக ஒரு சாட்சிகள்.( தந்தை ஆக இருப்பது நலம்).
இந்த சாட்சிகளுக்கும் அடையாள அத்தாட்சி காப்பி இணைக்கனும்.
திருமணம் நடந்து முடிந்த பள்ளிவாசலில் இருந்து திருமண சான்றிதல். குறிப்பாக மணமக்கள், ஆலிம் அவர்கள், சாட்சிகள் கையழுத்து போட்ட தப்தர் பக்கம் இருப்பது மிகவும் சிறந்தது. (சில சமயம் இந்த கையழுத்து பக்கம் இல்லை என்றால், பள்ளிவாசலில் கொடுக்கும் திருமண சான்றிதழை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் அட்டெஸ்ட் வாங்கனும்).
o திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய்.
o 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
o உங்களுக்கு கூடுதல் காப்பி வேண்டும் என்றால், ஒவ்வொரு காப்பிக்கும் பத்து ரூபாய் கூடுதல் கொடுக்கனும்.
o நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது உங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையை கொண்டு செல்லனும்.
பலர் ஆறு ஏழு முறை படை எடுத்தவர்களும் உண்டு. பலர் ஏன் திருமணம் பண்ணினோம் என்று நொந்தவர்களும் உண்டு. திருமணம் ஈசி ஆக நடந்து விடும், பதிவு செய்வதற்கு தாவு தீர்ந்து விடும்.
இனி, அவர்கள் கூறும் நாளில் சென்று (குறைந்தது ஒரு வாரம்), புரூப் (proof) பார்த்துவிட்டு, தவறுகள் இருந்தால் திருத்தி, அவர்கள் மீண்டும் கூறும் நாளில் சென்று உங்களுடைய கட்டாய திருமண பதிவு சான்றிதழ்களை பெற்று வாருங்கள்.
இன்னும் ஒரு விசயம் உள்ளது.. குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. நோ டென்ஷன்…தண்டனை அதிகம் இல்லை.. தண்டனை 1000 ரூபாய் அபராதம் மட்டுமே.
http://lalpetexpress.com/
SMS ஹாஜா. B.Sc.,
மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்கு கணவர் உரிமை கொண்டாட முடியுமா?
ஒரு சொத்து எந்த வகையில் வந்தது என்பதை பொறுத்து அதன் உரிமை அடங்கி இருக்கிறது. பூர்வீக சொத்தாக இருந்தால் அந்த சொத்தை அனுபவிப்பவருக்கு பின் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் உரிமை உண்டு. அதனால் தான் தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டு என்பது உறுதி படுத்தப்பட்டதாக இருக்கிறது.
மனைகளுக்கான அங்கீகாரமும் நிபந்தனைகளும்
Tuesday, September 16, 2014
ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா
ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா
ஆன்லைன் மூலம் நில உரிமம் பட்டா/சிட்டா பார்க்க விரும்பினால்
http://eservices.tn.gov.in/eservicesnew/home.html
இந்த page open ஆகும்