Monday, February 18, 2019

் ஏரி, குளங்களில் வண்டல் மண்

*சமூக - புலன் விசாரணை -*🅘🅡🅐✍🏼            _அநீதிக்கு எதிரான குரல்✒_       ━━ *பதிவு நாள் : 19/02/2019* ━━  ❇ *_சட்டம் அறிந்துகொள்வோம்!_*  🔘 *விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?*  ▪ *ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை நாம் எடுத்துக்கொள்ளலாமா?*  எடுத்துக்கொள்ளலாம். நமது பகுதியில் உள்ள ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய தேவைகளுக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.  யாரிடம் முன் அனுமதி பெறவேண்டும்?  மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது இதற்காக அவரால் நியமிக்கப்பட்ட அலுவலரிடமோ முன் அனுமதி பெறவேண்டும்.  விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டும் தான் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள முடியுமா?  இல்லை. பொதுமக்களும் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம்  ஒருவர் தனது வீட்டுப் பயன்பாட்டிற்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ எவ்வளவு மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அளவீடு ஏதும் உள்ளதா?  உள்ளது. 30 கன மீட்டர் (தோராயமாக 10 யூனிட் லோடு) அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்  இந்த அளவிற்கு வண்டல் மண்ணை எடுக்க அரசுக்கோ அல்லது வேறு எவருக்கோ கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?  இல்லை. எவ்வித கட்டணமும் யாருக்கும் செலுத்த தேவையில்லை. ஆனால் , மேற்குறிப்பிட்ட அளவிற்கு மேல் மண் எடுக்க வேண்டுமெனில் மாவட்ட நிர்வாகம் கூறும் தொகையினை செலுத்த வேண்டும்.  எந்தெந்த ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம்? பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகிய இவ்விரண்டு அரசுத் துறைகளின் பொறுப்பில் இருக்கும் ஏரி குளங்களில் நாம் வண்டல் மண் எடுக்கலாம்.   தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகள் இத்துறைகளின் பொறுப்பில் வரும்.   எனவே நமது பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான ஏரி மற்றும் குளங்களில் நாம் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.  இதற்கென உள்ள அரசாணை எண் என்ன? அரசாணை நிலை எண் 233, தொழில்துறை (எம்.எம்.சி.2) நாள்: 23.09.2015  அரசாணையை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.   www.tnmine.tn.nic.in/GO/G.O.MS.NO.233.pdf

அ பதிவேட்டை

பதிவேட்டை புரிந்து கொள்வது அவசியம்...

அசையா சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பாக பட்டா சிட்டா அடங்கல் அ பதிவேடு என வருவாய்துறை  பல்வேறு ஆவணங்களை பராமரித்து வருகிறது...

#பட்டா

பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை காட்டும் ஆவணம் ஆகும்.மேலும் ஊர் மாவட்டத்தின் எல்லைபகுதி உரிமையாளரின் பெயர் நன்செய் புன்செய் நிலம் பரப்பு மற்றும் தீர்வை விவரங்களும் தெளிவாக இருக்கும்...

#சிட்டா

சிட்டா என்பது ஒரு தனிநபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று அரசாங்கம் வைத்து இருக்கும் பதிவேடு ஆகும்..பட்டாவில் உள்ள அனைத்து விவரங்களும் சிட்டாவில் இருக்கும்..

#அடங்கல்
அடங்கல் என்பது ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு ஆகும்.
குறிப்பிட்ட சர்வே எண்ணுகுரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது என்கிற விவரங்கள் இருக்கும்..

அ  பதிவேடு என்பது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஆவணங்களின் ஒட்டு மொத்த விவரங்களும் அடங்கியுள்ள ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்..

ஒரு சொத்து எப்போது யாரிடம் இருந்து யார் பெயருக்கு மாறினாலும் அது குறித்து இந்த ஆவணங்களி்ல் உரிய திருத்தம் செய்யபடும்.

முழுமையாக முத்திரைதீர்வை செலுத்தி பத்திபதிவு செய்தாலும் பட்டா சிட்டா அடங்கள் ஆவணங்களில் உள்ள பெயர் மட்டுமே உரிமையாளரை அடையாளம் காட்டும். வி.எ.ஓ என்னும் கிராம நிர்வாக அலுவலர் பயன்பாட்டில் இருந்தாலும் வட்டாச்சியர் ஒப்புதல் இன்றி யாரும் எந்த மாற்றத்தையூம் செய்து விட முடியாது..

சொத்து பரிமாற்றத்தில் முக்கிய ஆவணமாகும்.  பட்டா சிட்டா நிலத்தின் சர்வே எண் அளவு உரிமையாளர் பெயர் பயன்பாடு வரி ஆகிய விவரங்கள்  அ  பதிவேட்டிலும் இருக்கிறதா என்று பார்த்து சொத்து வாங்குவது சிறந்தது..
பா.வெ.